மேற்கு வங்கத்தில் கிணற்றில் விழுந்த யானைக் குட்டி நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள லால்கர் என்ற இடத்தில் 15 யானைகள் கொண்ட குழு உலாவிக் கொண்டிருந்தது. இதில் தடம் மாறிய 4 மாதங்களேயான யானைக் குட்டி அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது.
இதனையடுத்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர், மக்களுடன் இணைந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் யானைக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.