அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் நியமிக்கப்பட்டுள்ளார்.
74 வயதான எல்லன் பொருளாதார நிபுணராவார். அவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஒபாமா காலத்தில் ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றிய எல்லனை, ஜோ பைடன் நிதியமைச்சராக நியமித்துள்ளார்.
புதிய அரசின் 1.9 டிரில்லியன் டாலர் கொரோனா நிதியுதவித் திட்டம், வரி சீர்திருத்தம், பட்ஜெட் சலுகைகள் உள்ளிட்டவை அவருக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.