ஆஸ்திரேலியாவில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தடுப்பூசி செலுத்த தற்காலிகமாகவே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் முதல் அங்கு ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைசர் நிறுவனத்திடமிருந்து 1 கோடி தடுப்பூசி மருந்துகளை பெற ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தமிட்டுள்ளது. 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்துகளை அக்டோபர் மாதத்திற்குள் செலுத்தி முடிக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.