சீனாவின் யுனான் மாகாணத்தில், அழிவின் விளிம்பில் இருந்த Phayre இன குரங்குகள் மீண்டும் தென்படத் துவங்கி உள்ளன.
இலைகளை பிரதான உணவாகக் கொண்ட Phayre இன குரங்குகள், ஆதிவாசிகளால் அதிகம் வேட்டையாடப்பட்டதால், அழிவின் விளிம்பிற்குச் சென்றன.
அவற்றை பாதுகாக்க சீன அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் , தற்போது அதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பிறந்து 3 மாதங்கள் வரை ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் அதன் குட்டிகளை சீனர்கள் ஆர்வமுடன் ரசிக்கின்றனர்.