தென் அமெரிக்க நாடான சிலியில், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அப்புறப்படுத்தினர்.
கடந்த ஒரு ஆண்டாக, சிலி அரசின் கல்வி மற்றும் சுகாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்கள் கண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர்.
தலைநகர் சாண்டியாகோவில், சாலைகளில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.