ஃபைசர் நிறுவனம் 4 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை பொருளாதாரத்தில் பின் தங்கிய 92 நாடுகளுக்கு குறைந்த விலையில் வழங்க உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் ஏழ்மை மற்றும் வளரும் நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இருப்பதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
வல்லரசு நாடுகள் பெரும்பாலும் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒப்பந்தங்களை பெற்றிருப்பதால் , பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளுக்கு லாப நோக்கமின்றி, பிப்ரவரி மாதம் முதல் குறைந்த விலைக்கு மருந்துகளை வழங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.