ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் Thomas Bach உறுதியாக தெரிவித்தார்.
டோக்கியோவில் பேசிய அவர், வருகிற ஜூலை மாதம் 23ந்தேதி ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நடைபெறும் என்றார். இந்த போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான விளையாட்டு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த போட்டிகள் கொரோனா காரணமாக ஒரு வருடம் தாமதமாக நடைபெற இருக்கிறது என்றார்.