அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான தகுதி நீக்கத் தீர்மானம் வரும் திங்கட்கிழமை செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு நடுநிலையுடன் விசாரணை நடத்தப்படும் என்று செனட் சபையின் பெரும்பான்மைத் தலைவர் Chuck Schumer தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட தகுதிநீக்கத் தீர்மானத்தை செனட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்கு டிரம்ப் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு முறை தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்று கூறப்படுகிறது.