அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் பதவி வகிக்க உள்ளார்.
இது தொடர்பாக அதிபர் ஜோ பைடனின் பரிந்துரைக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இப்பதவியை வகிக்க உள்ள முதல் கருப்பின மனிதர் இவர்.
இதனிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித் தொடர்பாளர் ஒருவர், உள்நாட்டு பயங்கரவாதத்தைக் குறித்து விசாரணை நடத்த ஜோ பைடன் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.