அமெரிக்கத் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், இதனால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை ஊடகத்துறைத் செயலர் ஜென் சாக்கி, செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்குப் பல முறை சென்றுவந்துள்ளதாகவும், அவர் இந்தியா மீது பெருமதிப்புக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய - அமெரிக்க தலைவர்களிடையே நல்லுறவு உள்ளதாகவும், அது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.