ஊடக நிறுவனங்களின் செய்தி கன்டன்ட்டுகளை பயன்படுத்துவதற்கு பணம் வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் சர்ச் எஞ்சின் பயன்பாட்டை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என கூகுள் எச்சரித்துள்ளது.
சர்ச் எஞ்சின்களின் தேடல் முடிவுகளில், செய்தி கன்டன்டுகளை துணுக்குகளாக பயன்படுத்துவதற்கு, சம்மந்தப்பட்ட செய்தி ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டு, உரிய பணம் வழங்க வேண்டும், தவறினால் மில்லியன் டாலர் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது.
இண்டர்நெட் மற்றும் சர்ச் எஞ்சின் இயங்கும் முறைக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாகவும், தங்களது வர்த்தகத்தையும் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் சர்ச் எஞ்சின் பயன்பாட்டை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று, கூகுள் நிர்வாகி எச்சரித்துள்ளார்.