2022ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை சீனா அறிமுகம் செய்துள்ளது.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் போட்டிகள் நடைபெறும் பெய்ஜிங், யான்கிங், ஹெபே பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சீன விளையாட்டு வீரர்களின் பயிற்சி திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.