ஈராக் தலைநகர் பாக்தாத்தில், 2 ஆண் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாக்தாத்தின் சந்தை பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் சாலைகளில் ரத்தமும், சதையுமாக காணப்படுகின்றன. தாக்குதல் தொடர்பாக பிரதமர் முஸ்தபா அல் காதிமி ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க முக்கிய சாலைகளில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.