பிலிப்பைன்ஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தெற்குப் பகுதியில் உள்ள டாவோ நகரின் தென் கிழக்கில் சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், மற்றொரு தீவான மின்டானோவோவைத் தாக்கியது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சேதமும் இல்லை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என பிலிப்பைன்ஸ் அரசு கூறியுள்ளது.