ஈராக் நாட்டில் ஒரே நேரத்தில் இரு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் பாக்தாத்தின் அல்-தயரன் சதுக்கத்தில் உள்ள சந்தையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 73 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குலை ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் நடத்தியிருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.