சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, கொரோனா காலங்களில் கடந்த வந்த பாதைகளை நினைவுப்படுத்தும் விதத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கொரோனா தடுப்பில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் பணிகளை சிறப்பிக்கும் வண்ணம், மருத்துவர்களின் கவச உடைகள், அவர்கள் பணி செய்யும் புகைப்படம், குறிப்புகள் மற்றும் நெகிழ்ச்சியான அனுபவங்கள் குறித்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கண்காட்சியை மக்கள் உணர்ச்சி பொங்க பார்வையிட்டனர்.