தாங்கள் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல, அதை நிறைவேற்றுபவர்கள் என்று அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உரையாற்றியுள்ளார்.
அமெரிக்கா தற்போது கடினமான சூழலை சந்தித்து வருவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் இதனை கடக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு போரின்போது ஆபிரகாம் லிங்கனின் சாதனைகளை மேற்கோள் காட்டிய அவர், இனவெறிக்கு எதிராக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங்கின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டு பேசினார்.