அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளிலேயே, அவரின் ஆட்சியை எதிர்த்து ஒரேகான் மாகாணத்தில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
அதில், தங்களுக்கு பைடன் வேண்டாம், தாங்கள் பழிவாங்க வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டவர்கள், ஒரேகான் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கலவரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளது.