ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா மற்றும் காம்பியா நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை சிறிய படகில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் லிபியா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோசமான வானிலை காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 10 மட்டும் உயிர் தப்பியதாகவும் புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சிலர் குறித்த தகவல் இல்லை என்றும், அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.