செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஜப்பான் சென்றடைந்த இந்திய மாலுமிகள் குழு..7 மாதங்கள் பின் இந்தியா திரும்ப ஏற்பாடு

Jan 19, 2021 01:44:08 PM

ஆஸ்திரேலியா நிலக்கரியை ஏத்திச்சென்று சீன துறைமுகம் அருகே சிக்கி தவிக்கும் எம்.வி ஜக் ஆனந்த் (M .V . Jag Anand ) என்ற இந்திய கப்பல் அதன் 23 இந்திய குழுவினருடன் , குழு மாற்றத்திற்காக ஜப்பான் துறைமுகம் சென்றடைந்தது.

2018 முதல் சீனா ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான உறவில் சிக்கல் நிலவி வருகிறது. சீனாவின் பிரபல டெக் நிறுவனமான ஹவாய் டெக்னாலஜியின் 5ஜி நெட்வொர்கிற்கு ஆஸ்திரேலியா தடை விதித்தது. மேலும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சீனா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாடுகளை போல ஆஸ்திரேலியாவும் வலியுறுத்தி வந்தது.

இதனை தொடர்ந்து , அமெரிக்காவின் கைப்பாவையாக ஆஸ்திரேலியா செயல்படுவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மீது சீனா பல இறக்குமதி தடையை விதித்தது. ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி மற்றும் நிலக்கரி போன்ற பொருட்கள் மீது சீனா இறக்குமதி தடை விதித்தது.

இதனால் ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி ஏந்திச்சென்ற எம்.வி ஜக் ஆனந்த் என்ற இந்திய கப்பல் சீன துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் குழு மாற்றத்திற்கும் சீனா தடைவிதித்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்த கப்பல் சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, சீனாவுடன் மேற்கொண்ட பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, எம்.வி ஜக் ஆனந்த் கப்பல் ஜப்பான் துறைமுகம் சிபாவிற்கு  அனுப்பிவைக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனைக்கு பின் அந்த 23 மாலுமிகளை கொண்ட குழு அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய வந்தடையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

எம்.வி ஜக் ஆனந்த் கப்பல் போல மேலும் 50 கப்பல்கள், சீன துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் கடலில் சிக்கி தவிப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் காஃபீடியன்(Caofeidian ) துறைமுகம் அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிக்கி கொண்டிருக்கும் எம். வி அனஸ்தேசியா(M.V anastasia ) என்ற இந்திய கப்பலில் இருக்கும் 16 இந்திய மாலுமிகளை மீட்க இந்தியா தொடர்ந்த முயற்சிசெய்து வருகிறது.


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement