பாலைவனத்தில் பனிப்பொழியும் அரிதான நிகழ்வு அல்ஜீரியா நாட்டின் அயன்செஃப்ரா பகுதியில் அரங்கேறியுள்ளது.
அப்பகுதியில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பாலைவனப் பகுதிகள் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதுபோன்ற அரிதான நிகழ்வு சுற்றுலா பயணிகளையும், இயற்கை ஆர்வலர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிகழ்வு கடந்த 1979, 2017, 2018ஆம் ஆண்டுக்கு பிறகு 4வது முறையாக மீண்டும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.