விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நாவல்னியை மாஸ்கோ விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.
ரஷ்யாவில் புடின் அரசைக் கடுமையாக விமர்சித்த அலெக்சீ நாவல்னி 5 மாதங்களுக்கு முன் விமானத்தில் சென்றபோது மயக்கமடைந்தார்.
அவர் அருந்திய தேநீரில் நஞ்சு கலந்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை ஜெர்மனிக்குக் கொண்டு சென்று பெர்லின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல்நலம் தேறிய அவர் 5 மாதங்களுக்குப் பின் நேற்று பெர்லினில் இருந்து விமானத்தில் மாஸ்கோவுக்கு வந்தார். விமான நிலையத்திலேயே காவலர்கள் 4 பேர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.