ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இரண்டு பேர், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காரில் அலுவலம் சென்று கொண்டிருந்த பெண் நீதிபதிகளை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சராமாரியாக சுட்டனர்.
இதில், 2 பெண் நீதிபதிகளும் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பல்ல என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.