அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வருகிற 20-ந் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில் கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக டெலாவேர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசத்தின் ஆரோக்கியம் உண்மையில் ஆபத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
முதலாவதாக அதிக முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க உடனடியாக மாகாணங்களுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்கள் முடிவில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்திருப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.