இத்தாலியில், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் தடையை மீறி திறந்து வைக்கப்பட்டன.
இத்தாலியில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாலை 6 மணிக்கு மேல் உணவகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் சூப்பர் மார்கெட்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோபமுற்ற உணவக உரிமையாளர்கள், மாலை 6 மணிக்கு மேல் உணவகங்களை திறந்து வைத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.