வட கொரியாவின் ராணுவ பலத்தை பிரகடனப்படுத்தும் விதமாக, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தலைநகர் பியோங்யாங்கில், அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில், புக்குக்சொங் (Pukguksong) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ரக ஏவுகணைகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
இவை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை எனத் தெரிவித்துள்ள வட கொரியா அரசு, அவற்றைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரித்து வருகிறது.