உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் 2 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய நிலப்பிரபுவாக உருவெடுத்துள்ளார்.
லூசியானாவில் 69 ஆயிரத்து 71 ஏக்கர், ஆர்கன்சாஸில் 47 ஆயிரத்து 927 ஏக்கர் என பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பெயரில் 12க்கும் மேற்பட்ட மாகாணங்களிலும் வெளிநாடுகள் பலவற்றிலும் விவசாய நிலங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. இவர்களது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நீண்ட காலமாக விவசாயத் துறையில் இயங்கி வருகிறது.
2000மாவது ஆண்டின் முற்பகுதியில் இருந்தே, பில்கேட்ஸும் அவரது மனைவியும் வளரும் நாடுகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல முதலீடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.