சிலி தலைநகர் சாண்டியாகோவில் அந்நாடு அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடியவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் விரட்டியடித்தனர்.
ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி முறை ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, அங்கு கடந்த ஓராண்டாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாரம்தோறும் வெள்ளிகிழமை மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறு போராடத்தில் ஈடுபடுவர்களை தடுக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது உள்பட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.