அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அசார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வன்முறையைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்கள் ஜனநாயகம் மற்றும் பாரம்பரியமாக நடைபெற்று வரும் அமைதியான அதிகார மாற்றங்களின் மீதான தாக்குதல் என அசார் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.