அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வன்முறைகளைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர், பதவியேற்பு முடிந்த பின்னரும் பல நாட்களுக்கு பாதுகாப்பு வளையம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் உள்ளிட்ட முக்கிய மால்கள் 21ம் தேதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பல்வேறு கடைகள் ,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
வாஷிங்டனில் பதவியேற்பு நாளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.