சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறி ஜியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
சீன ராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன ராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவனங்களில், முதலீடு செய்யக் கூடாது என அமெரிக்கா தடை விதித்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, விமான தயாரிப்பு நிறுவனமான கோமேக் உள்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் இந்த 9 நிறுவனங்களிலும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்த அமெரிக்கர்கள் பங்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.