இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக கவர்னர் அலுவலகம், மருத்துவமனை உட்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொலைபேசி சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.