அடுத்த அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸை வரவேற்கும் விதத்தில் ஆயிரம் டைல்ஸ் கொண்டு அமெரிக்க நாடளுமன்ற கட்டிடம் முன் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் கோலம் போட்டுள்ளனர்.
பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெயர் போன நாடு இந்தியா .அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து பெண்கள் கோலம் போடும் கலாசாரம் இன்றளவிலும் இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. கோலங்கள் பெரும்பாலும் அரிசிமாவில் போடப்படுகின்றன. இதனால் ஈ, எறும்புகள் கோலத்தில் உள்ள அரிசியை உண்டு உயிர் வாழும். வாயில்லா உயிரினங்களுக்கும உணவு வழங்கும் அடிப்படையில் போடப்படும் கோலங்களுக்கு வேறு சில சிறப்புகளும் உண்டு. கோலத்தில் இருக்கும் புள்ளிகள் வாழ்க்கையின் கஷ்டங்களையும், அதனை இணைக்கும் கோடுகள் அந்த கஷ்டங்களை நாம் கடந்து செல்வத்தையும் குறிப்பதாகும்.
தற்போது, வாஷிங்டன் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடனின் பதவியேற்பு விழாவுக்கு ஆயத்தமாகி வருகிறது. இதனால், அமெரிக்க வாழ் இந்திய குடிமக்கள் சிலர் இணைத்து அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் முன் ஆயிரம் டைல்ஸ் கொண்டு கோலம் போட்டுள்ளனர். இந்த வருடம் அமெரிக்காவின் பன்முகத்தனமை காக்கப்பட்டு, அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்த கோலம் போடப்பட்டுள்ளதாக இந்தியர்கள் கூறுகின்றனர்.
மேலும் இதனை தொடர்ந்து ," www.2021kolam.com " என்ற இணையதள பக்கம், ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸை வரவேற்கும் விதமாக , இணையதள கோல போட்டி ஒன்றை நடத்திவருகிறது .