சீனக் கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்களில் பல மாதங்களாக சிக்கியுள்ள 39 இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் எம்.வி அனஸ்தாசியா கப்பலில் உள்ளவர்களை மாற்றி விட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே போன்று எம்.வி ஜக் ஆனந்த் என்ற கப்பலில் சிக்கிய 23 மாலுமிகள் கப்பலில் இருந்து மாற்றப்பட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 39 இந்தியர்கள் இந்த இரண்டு கப்பல்களிலும் பல மாதங்களாக கரைக்கு வர அனுமதி கிடைக்காமல் சீனக்கடலில் சிக்கியுள்ளனர்.