சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் ஓடுவதற்கு ஏற்ற வகையில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை ஹுவேய் நிறுவனம் அமைத்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேய் போக்குவரத்துத் துறையில் கால்பதிப்பதற்கான முதற்படியாக ஊக்சி நகரில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை அமைத்துள்ளது. இந்தச் சாலையில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் பேருந்து சென்று வருகிறது.
வேகத்தடைகள், சாலைச் சந்திப்புகள், நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்தப் பேருந்து சரியாக நின்று மீண்டும் புறப்பட்டுச் செல்கிறது.
சாலையின் நடுவிலும் சாலையோரத்திலும் கைகாட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ள உணர்விகள், கேமராக்கள், ராடார்கள் ஆகியவற்றில் இருந்து பேருந்தை வழிநடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.