அண்டார்டிக் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை பென்குயின் முதன்முறையாக மெக்சிகோவில் உள்ள இன்பார்சா பூங்காவில் பிறந்துள்ளது.
ஜென்டூ (Gentoo) வகையை சார்ந்த இந்த பென்குயினுக்கு அலெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் மட்டுமே வாழக்கூடிய இந்த பென்குயினை பூங்கா நிர்வாகத்தினர் மிகவும் கவனத்துடன் பராமரித்து வருகின்றனர்.