இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ சீன நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
சீன பயோ-பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள சினோவாக் தடுப்பூசியை முதல் ஆளாக ஜோகோ வி போட்டுக் கொண்டார். அவர், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் காட்சி நேரலையில் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இதனால், மக்கள் அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசியினை எடுத்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.