அவசரச் செலவினங்களுக்காக தனது பணத்தை விடுவிக்க வேண்டும் என தொழிலதிபர் மல்லையா விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.
தனது மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும், இதர செலவினங்களுக்காகவும் இங்கிலாந்து வங்கியில் உள்ள 2 புள்ளி 9 மில்லியன் பவுண்ட் பணத்தில் 2 புள்ளி 8 மில்லியன் பவுண்ட் பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, உடனடியாக பணத்தை விடுவிக்க மறுத்ததுடன், வழக்கை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தார்.