பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கடற்கரையில் விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இபனேமா கடற்கரையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததால் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் தற்போது நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழலில், மக்கள் இவ்வாறு விழிப்புணர்வின்றி நடப்பது வருத்தம் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.