வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக அதிபர் கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபரும், தொழிலாளர் கட்சியின் பொது செயலாளருமான கிம் ஜாங்-2 கடந்த 2011ம் ஆண்டில் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது மகனான கிம் ஜாங் உன் அதிபராக பதவியேற்ற போதிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் புதிதாக தேர்வு செய்யப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.