ஸ்பெயின் நாட்டில் பிலோமினா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
மாட்ரிட் அவசர சுகாதார சேவைத் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது ஸ்பெயினில் உள்ள முக்கிய சாலைகள், இருப்பு பாதைகள், வானுயர்ந்த கட்ட்டிங்கள் என எங்கு நோக்கினும் பனி படர்ந்து ஒரே வெண்ணிறமாய் காட்சி அளித்தது.
அங்கு அடுத்த வாரம் மைனஸ் பத்து டிகிரிக்கும் கீழே வெப்பம் பதிவாகும் என்றும் இதனால் கடுமையான பனி பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.