வரும் 20 ஆம் தேதி, ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு டிரம்ப் பல சர்ச்சையான கருத்துக்களை கூறி வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடத்திய வன்முறை பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என கூறி டிரம்ப் கூறி விட்டார். எனவே குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் அதில் பங்கேற்கிறார்.
நாடாளுமன்ற கலவரத்திற்குப் பிறகு நடந்த அவைக் கூட்டத்தில், அதிபராக பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்ததும் மைக் பென்சே என்பது குறிப்பிடத்தக்கது.