ஜப்பானின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நியாஹடா, தயோமா, இசிகவா, புகி, சிகா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சாலைகளிலும், வீடுகளின் கூரைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.
சாலைகளில் குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவழியில் சிக்கியுள்ளன. இதையடுத்து பனிக்கட்டிகளை அப்புறபடுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.