செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அமெரிக்கா : அதிகளவில் வேலையிழப்பு.....ஆண்களை முந்திய பெண்கள்!

Jan 09, 2021 02:40:59 PM

அமெரிக்காவில்,ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக வேலை இழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெண்கள் வேலை இழப்பது குறைவாகவே இருந்தது. ஆனால் 2020ஆம் ஆண்டின் முடிவில் அது விரிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்களை காட்டிலும் பெண்கள் 8,60,000 குறைவான வேலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலர்க்கு நிகராக பெண்கள் சராசரியாக 81 காசுகள் மட்டுமே சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து, உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க உலகநாடுகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பல துறைகள் அவதிப்பட்டன.
கொரோனவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில்,கல்வித்துறை , குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு, ஆடை அணிகலன் விற்கும் கடைகள் மற்றும் உணவகங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.

அமெரிக்காவில்,இந்த 3 துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் வேலைபுரிந்து வந்தனர். கொரோனாவால் , இந்த தொழில்கள் அனைத்தும் முடங்கிப்போயின. இந்த துறைகளில் வீட்டிலிருந்து வேலை புரிவதற்கான வாய்ப்புகளும் குறைவு. இதனால் பெண்கள் அதிக அளவில் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பெண்களுக்கு, போதுமான விடுப்பு நாட்கள் வழங்கப்படாததாலும் ,வீட்டை கவனிக்கும் பொறுப்பு இருப்பதாலும் பலரும் வேலையை விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக கறுப்பின பெண்கள் மற்றும் வடக்கு அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட லாத்தின் இன பெண்கள் அதிகமாக வேலைகளை இழப்பதாக கூறப்படுகிறது.

லாத்தின் இன பெண்களின் வேலையின்மை விகிதம் 9.1சதவிகிதம் ஆகவும், கறுப்பின பெண்களின் வேலையின்மை விகிதம் 8.4சதவிகிதம் ஆகவும் உள்ளது. வெள்ளையின பெண்களின் வேலையின்மை விகிதம் அவர்களை ஒப்பிடும் போது 5 .7 சதவிகிதம் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனிற்கு பொருளாதாரத்தை மீட்பதும், வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.


Advertisement
சிலியில் முதன்முறையாக காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்
சிரியாவின் கடற்படை கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை கைப்பற்ற ராணுவத்துக்கு நெதன்யாகு உத்தரவு
அரசு முறைப் பயணமாக மாஸ்கோ சென்றடைந்தார் ராஜ்நாத்சிங்..
கர்தினால் பட்டம் இந்தியாவிற்கு பெருமை - பிரதமர் மோடி
ஹங்கேரி மீன்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் சுறா மீன்களுக்கு சிறப்பு உணவு
நடுக்கடலில் தத்தளித்த இந்திய மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது- மேக்ரன் பதவி விலக வலியுறுத்தல்
கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் நிலையம் முடங்கியது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
ஜப்பானில் பாரம்பரிய மதுபானம் தயாரிக்கும் பணி தீவிரம்

Advertisement
Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தி. நகர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியில் புழு கிடந்ததாக ஓட்டலில் வாடிக்கையாளர் ஆவேசம்..! ஆய்வு செய்து ஓட்டலை மூடிய அதிகாரிகள்

Posted Dec 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்

Posted Dec 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!


Advertisement