சிலி தலைநகர் சான்டியாகோவில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டியடித்தனர்.
ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி ஓராண்டாக வெள்ளிக்கிழமை தோறும் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்றும் சான்டியாகோவில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றம் ஏற்படவே ஆர்ப்பாட்டகாரர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டியடித்தனர்.