ஸ்பெயின் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதாலும், பனிப்புயல் வீசியதாலும் சாலையில் பனிக்கட்டி உறைந்து போக்குவரத்து முடங்கியதால் வாகனங்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றன.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வெள்ளியன்று இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் தரையெங்கும் பனி உறைந்து காணப்படுகிறது.
நானூற்றுக்கு மேற்பட்ட நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றன. மாட்ரிட் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.