வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவாசி பாரதிய திவஸ் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சுயசார்பு பாரதத்திற்கான பங்களிப்பு என்ற பெயரில் நடைபெறும் கருத்தரங்கை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்காக ஆற்றும் பங்கை முன்னெடுத்துக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவஸ் கொண்டாடப்படுகிறது.
இதே நாளில்தான் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார்.
இதனிடையே, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 1500 விமானங்கள் 24 நாடுகளுக்கு இயக்கப்பட்டதாகவும், அதன் மூலம் சுமார் 45 லட்சம் பேர் தாய்நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.