சீனக் கடல் பகுதியில் பல மாதங்களாக நங்கூரமிட்டு நிற்கும் இரண்டு சரக்குக் கப்பல்களில் உள்ள இந்திய மாலுமிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண சீனாவை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் அந்த இரண்டு கப்பல்களும் கரைக்கு வர சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.
சீனாவில் அந்த கப்பல்கள் துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாற்று வழிகள் குறித்தும் சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.
கப்பல்களில் உள்ள மாலுமிகளை வேறு கப்பல்களில் மாற்றிவிடும் படியும் சீனாவிடம் இந்திய தூதர் கேட்டுக் கொண்டுள்ளார்.