அமெரிக்காவில் ஒரே மூச்சில் ஒன்றே முக்கால் லிட்டர் விஸ்கியைக் குடித்து சாதனை படைத்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேலப் கன் என்ற 19 வயது மாணவர் ஒருவர் மாணவர்களுக்கு நடுவே சாதனை செய்வதாகக் கூறி 40 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட ஒன்றே முக்கால் லிட்டர் விஸ்கியை குறைந்த நேரத்தில் குடிப்பதாக அறிவித்தார்.
பின்னர் மாணவர்கள் எண்ணிக்கையைத் தொடங்கியதும் பாட்டிலைத் திறந்து 18 வினாடிகளில் அவ்வளவு விஸ்கியையும் குடித்து ஈர்க்கக் கூடிய உலக சாதனை படைத்ததாகக் கூறிக் கொண்டார்
உடல் ஏற்றுக் கொள்ளும் அளவை விட அதிக ஆல்கஹால் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜேலப் கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.