டுவிட்டரில் முடக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்ட நேரத்தில், வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக கூறி, டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள டிரம்பின் பக்கங்கள் முடக்கப்பட்டன.
இதில் டுவிட்டர் பக்கம் மட்டும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதேநேரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் டிரம்பின் பக்கங்கள் தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளன.